Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : கொரோனா பாதிப்பு…. மநீம தலைவர் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்….!!!!

மருத்துவமனையிலிருந்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தொடர்ந்து தீவிரமாக பரவி வந்து தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 22ஆம் தேதி தெரிவித்ததாவது: “அமெரிக்கா பயணம் முடிந்த பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது.

மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டேன். இன்னும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று அவர் தெரிவித்திருந்தார். பலரும் அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். தற்போது அவர் பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |