Categories
மாநில செய்திகள்

JUSTIN: கோவை மாணவி பாலியல் விவகாரம்… பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமீன்…!!!

கோவையில் 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிறு கிழமைதோறும் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக  ஒரு லட்சம் கொடுக்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Categories

Tech |