அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியைப் பயன்படுத்தி கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டுமே பெரும் ஆயுதமாக இருந்தது. இதில் பல தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது. அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கோவோவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியை அதிக அளவில் தயாரித்து ஏழை-எளிய மக்களுக்கு விநியோகிக்க இந்தியாவுடன் சீரம் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிலையில் இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதைப்பற்றி நிறுவனத்தலைவர் அதாா் பூனாவாலா தெரிவித்துள்ளதாவது: “கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கி றோம். கோவோவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.