Categories
மாநில செய்திகள்

JUSTIN : சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் தரை மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அமாவாசைக்கு  4 நாட்கள், பௌர்ணமிக்கு 4 நாட்கள் என மாதத்த்துக்கு 8 நாட்கள் மட்டும் மலையேறி பக்தர்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை பொழிவு மற்றும் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பதாக கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |