சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இனி கூகுள் செயலி மூலமாக காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் இணையவழி சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சபரிமலை சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 OR code பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் 9495999919 என்ற மொபைல் எண் மூலம் google.pay செயலி வழியாகவும் காணிக்கை செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தனலட்சுமி வங்கியுடன் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம்போர்டு செய்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.