சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க சபரிமலை தேவசம் போர்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளனர்.
கொரோனா பெரும்தொற்று காரணமாக தொடர்ந்து பல்வேறு கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. அதேபோல பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தேவசம்போர்டு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் சன்னிதானத்தில் உள்ள பக்தர்கள் அறை, பம்பை ஆறு உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.