15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 15 வயது முதல் 18 வயது உள்ள சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று முதல் கோவின் தளத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சற்று நேரத்திற்கு முன்பு கோவின் இணையத்தளத்தில் முன் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே 15 வயது முதல் 18 வயது உள்ள மாணவர்கள் இந்த கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.