Categories
மாநில செய்திகள்

JUSTIN : சிலிண்டர் விபத்து… உயரும் பலி எண்ணிக்கை….!!!

சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக இருந்த நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |