Categories
மாநில செய்திகள்

JUSTIN : சூரப்பா விவகாரம்…. “ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்”…. தமிழக அரசு அதிரடி…!!!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. இந்த ஆணையை எதிர்த்து சூரப்பா வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும், அதற்கான ஆணைய அறிக்கையை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை ஜனவரி 3ஆம் தேதி தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |