சென்னையில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் கலைவாணர் அரங்கில் வரும் 20-ஆம் தேதி முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு பாராட்டு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டி20 தொடரில் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் நவ.20-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
முன்னதாக ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பாராட்டு தெரிவித்து இருந்த முதல்வர் வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சென்னையில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.