ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை அருகே வீரபாண்டி என்னும் ஊரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை திறந்துவைத்த அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படும். கலப்பின மாடுகளுக்கு அனுமதி கிடையாது என்று கூறினார். மேலும் நாட்டு மாடுகளை பெருக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Categories