மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் மரணம் தொடர்பாக அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்று (மார்ச்-30) ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆணைய தரப்பு, வி.கே சசிகலா மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆகவே இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Categories