Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: தடுப்பூசி போடாவிட்டாலும் அழைத்து வரப்படுவர்…. மத்திய அரசு அதிரடி…..!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது.இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதையடுத்து ரஷ்ய ராணுவம் உக்ரைனின் தலைநகரான கீவ், டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், கார்கிவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் நகரங்களில் குண்டுமழை பொழிந்தது. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது. ராணுவ தளங்கள், விமான நிலையங்கள், கட்டிடங்கள் போன்றவை ஏவுகணைகளின் தாக்குதலில் பற்றி எரிந்து வருகின்றன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி செல்கின்றனர். இதற்கிடையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் 3-வது நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டாலும் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லையென்றாலும், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள். தடுப்பு விதிமுறைகளுக்கு விலக்கு அளித்து மனிதாபிமான அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |