சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரங்கள் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது,
1. நாகை
2. திருவாரூர்
3. புதுக்கோட்டை
4. தேனி
5. தென்காசி
6. நெல்லை
7. விருதுநகர்
8. தூத்துக்குடி
9. கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.