Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்… நாளை கனமழை பெய்ய வாய்ப்பு…!!!

வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. கரையை கடந்த போது 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதாகவும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்க கடல், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |