Categories
மாநில செய்திகள்

#JUSTIN: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு…. வெளியான தகவல்…..!!!!!

துபாயில் நடந்து வரும் சர்வதேச எக்ஸ்போவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது ஆகும். இந்நிலையில் அமீரக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த பரிசு அமீரக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அதாவது மரத்தினால் உருவாக்கப்பட்ட பாய்மரக்கப்பலில் அமீரக கொடியுடன் அந்த நினைவுப்பரிசு இருக்கிறது. இதனை பெற்றுக் கொண்ட ஸ்டாலின் Kalaignar the life புத்தகத்தை அமீரக அமைச்சருக்கு வழங்கினார்.

Categories

Tech |