மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் தொடர்பான இரண்டாவது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இதன் பிறகு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது ‘தமிழ்நாட்டில் ரசாயன தொழில் துறையினர் தொழில் தொடங்க வேண்டும். நாட்டின் பிளாஸ்டிக், லாஜிஸ்டிக் தேவைக்காக தமிழ்நாட்டில் 306 ஏக்கர் பரப்பளவில் பாலிமர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.