கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கேரளா கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடூர்-கருவட்டா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து காரையும், அதில் இருந்தவர்களையும் மீட்டனர்.
ஆனால் இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து காயமடைந்த மற்ற 4 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக பாய்ந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது..