திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக முறையில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என பேசியவர்கள் இதுபோன்று செயல்படுகின்றனர்.
எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தற்போது தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.