Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : திமுக கவுன்சிலரின் கணவர்…. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் போலீசாரை மிரட்டியதாக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் பெண் கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டை ஜேபி கோவில் தெரு பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது சிலர் கும்பலாக நின்று சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற அவர்களை அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த கும்பலில் இருந்த ஒருவர் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எங்களை ஏன் மிரட்டுகிறார்கள்? என்று கேள்வி கேட்டு காவல்துறையினரை தகாத வார்த்தையில் திட்டி உள்ளனர்.

மேலும் தங்கள் ஏரியா கவுன்சிலர் எங்களோடு இருப்பதாக தெரிவித்தார். 51 வது வார்டின் கவுன்சிலர் பெண் என்ற நிலையில் யார் அந்த கன்சில் கவுன்சிலர் சொல்லுங்கள் என்று காவல்துறையினர் கேட்க அங்கு நின்றிருந்தது கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் உதயநிதி ரசிகர் மன்ற செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பெண் கவுன்சிலரின் கணவர் காவல்துறையினரை தகாத வார்த்தையில் திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ராயபுரம் கிழக்கு பகுதி 51 ஆவது வட்டத்தை சேர்ந்த ஜெகதீசன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |