திரிபுராவில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா மாநிலத்தில் அகர்தலா மாநகராட்சி 51 வார்டுகள், 13 நகராட்சிகள், ஆறு நகர பஞ்சாயத்துகளில் உள்ள 334 இடங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் பாஜக 2018 ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் இதுவாகும். இந்நிலையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் முப்பத்தி ஆறு பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் எதிர் கட்சி வேட்பாளர்கள் எவரும் களத்தில் இல்லாத காரணத்தினால் 112 இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சியுள்ள 222 இடங்களில் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தி வேட்பு மனுவை பாஜகவினர் வாபஸ் வாங்க செய்துள்ளனர் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட.து இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் திரிபுராவில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில தேர்தல் ஆணையத்துடன் டிஜிபி நாளை மாலைக்குள் ஆலோசனை நடத்தி கூடுதல் பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும். நவம்பர் 25இல் தேர்தலுக்கும், நவம்பர் 28ல் வாக்கு எண்ணிக்கைக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில காவல்துறை செய்ய வேண்டுமெனவும் திரிபுரா காவல்துறையினருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.