கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு 100 திருக்குறளை எழுத வைத்து காவல்துறையினர் தூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
கோவை அருகே மதுக்கரை மரப்பாலம் ஐயப்பன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் பொழுது இரண்டு தரப்புகளை சேர்ந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை தொடர்ந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் திருவிழாவில் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் 100 திருக்குறள் எழுத வைத்து நூதன தண்டனை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.