Categories
மாநில செய்திகள்

JUSTIN : “தீக்குளித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்”….. முதல்வர் அறிவிப்பு….!!!!

சென்னை ஆர்.எஸ்.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, மயிலாப்பூர் ஆர்.எஸ். புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதையும் மீறி தற்போதுவரை 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையன் என்பவர் தனது வீட்டை இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திடீரென்று மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது தீக்குளித்த கண்ணையா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சென்னை ஆர்.எஸ். புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன்  குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாப்பூர், மந்தவெளி கட்டப்பட்டு வரும் வீடுகளில் ஆர்எஸ் புரம் மக்கள் உரிய மரியாதையுடன் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |