அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது twitter profile ஐ மீண்டும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதை குறிப்பிட்டுள்ளார் இபிஎஸ். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானார். அந்த பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கி இருந்தார்.தற்போது பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட உத்தரவு செல்லாது என இன்று தீர்ப்பு வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ட்விட்டரில் ப்ரொபைலை மாற்றி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.