Categories
மாநில செய்திகள்

JUSTIN: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்….. கொலையான செல்வத்தின் மனைவி வெற்றி….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் கொலை செய்யப்பட்ட திமுக மடிப்பாக்கம் வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா 188-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். தனது மனைவியை மாநகராட்சித் தேர்தலில் திமுக சார்பில் நிறுத்த தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட கும்பலால் செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |