மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்க்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது .அதில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது .