தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது இல்லை. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் தளபதி விஜய்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது அதிகாரப்பூர்வ தளபதி விஜய் மக்கள் இயக்கம் ட்விட்டர் பக்கத்தில் தளபதியின் சார்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்கும் வாழ்த்து சொல்லாத விஜய் திடீரென என்று சொல்லி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.