Categories
மாநில செய்திகள்

JUSTIN: “நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை… உத்தரவிடுங்கள்… உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன்”…. முதல்வர் உரை…!!!

நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது எனக்கு பெருமை அல்ல… நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே பெருமை.. என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். மேலும் பல நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் ‘திமுக ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது. ஒரு இனத்தின் ஆட்சியாக இருக்கும் என்று தெரிவித்தேன். அதேபோல் தமிழினத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன். திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்று பெயர் எடுத்தோம்.

கடந்த ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை பற்றி நான் பேச விரும்பவில்லை. அரசியல் செய்ய அதற்கு வேறு மேடைகள் உள்ளது.  ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. அதற்குள் நாங்கள் பல நலத்திட்டங்களை செய்துள்ளோம். இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது இதில் என்னென்ன செய்வோம் என்பதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். ஐந்து மாதம் அல்ல ஐந்து ஆண்டு காலமும் இதே போன்று நாங்கள் மக்களுக்காக பணி செய்வோம். நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது எனக்கு பெருமை அல்ல, நம்பர் ஒன் தமிழ் நாடு என்பதே பெருமை… உத்தரவிடுங்கள்… உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன்.. எங்களை உற்சாகப் படுத்துங்கள்…” என்று அவர் பேசினார்.

Categories

Tech |