Categories
மாநில செய்திகள்

#JUSTIN: நாகையில் கனமழை…. தமிழகத்தில் மீண்டும் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி வீசி வருவதால் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வளி மண்டல மேல் அடுக்கில் புதிதாக உருவாக்கியுள்ள காற்று சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர், வேளாங்கண்ணி, வாஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடல் பகுதியில் காற்று 40 கி.மீ வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |