Categories
மாநில செய்திகள்

JUSTIN: நாளை ஒருநாள் விடுமுறை…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாகபுதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டையில் நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |