Categories
மாநில செய்திகள்

JUSTIN: நிவாரண பொருள்களுக்கு IGST வரி விலக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் தமிழகத்திற்கு பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதன்படி கொரோனா சிகிச்சைக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் கொரோனா  தொடர்பான நிவாரண பொருட்கள் அனைத்திற்கும் IGST வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |