Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலையை குறைக்க வேண்டும்… ஈபிஎஸ் வேண்டுகோள்…!!!

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில மாதமாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூபாய் 50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை உயர்வை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை கண்டித்து திருப்பூரில் நவம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக நூல் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் தீர்மானம் செய்துள்ளது. இந்நிலையில் பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ள நூலின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |