Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலை உயர்வு… திருப்பூரில் நவ.26 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்…!!!

நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் நவம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை உயர்வை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மத்திய ஜவுளித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை கண்டித்து திருப்பூரில் நவம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக நூல் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |