Categories
மாநில செய்திகள்

JUSTIN: நோரோ தொற்று…  மக்களே அச்சப்படாதீங்க…  ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…!!!

நோரோ நோய்த்தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதேசமயம் கவனக் குறைவாகவும் இருக்கக் கூடாது. இந்த நோய் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது: “வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.

மேலும் சாலையோர கடைகளில் எண்ணெயில் பொரித்த உணவுகள், சட்டினி, கொதிக்க வைக்காத நீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளாதீர். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |