Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : பண மோசடி புகார்….. நடிகர் விமல் நேரில் விளக்கம்….!!!!

தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரியிடம்நடிகர் விமல் விளக்கம் அளித்தார்.

சென்னை பெரவள்ளூரைச்  சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார்.

ஆனால் என்னிடம் வாங்கிய கடன் தொகை 5 கோடியை நடிகர் விமல் கொடுக்கவில்லை. அவர் 10க்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எனக்கு தரவேண்டிய 5 கோடியைத் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டார். பணத்தை கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை வாங்கி தரும்படி வேண்டுகிறேன் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து  நடிகர் விமல் விசாரணை அதிகாரியிடம் நேரில் ஆஜராகி தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகார் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |