பனை ஆராய்ச்சிக்காக தமிழக அரசு ஒரு கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் முன்பெல்லாம் பனை மரங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் .தற்போது பனை மரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், பனைமரத்தில் புதுமையான ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வினியோகிக்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.