Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளிக்கட்டடங்கள் இடிப்பு…. இன்று முக்கிய ஆலோசனை….!!!!

பள்ளி கட்டிடங்கள் இடிப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சமீபத்தில் திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளியில் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

இதில் செய்முறைத் தேர்வு பிப்ரவரி மாதம் நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. மேலும் பொது தேர்வு நடத்துவதற்கு நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களை தயார் செய்ய வேண்டும் என்றும்,  சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிப்பது தொடர்பாகவும் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இதில் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள், கூடுதலாக தேவைப்படும் வகுப்பறை,  மாற்று இடம் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Categories

Tech |