மணப்பாறை அருகே பள்ளி கழிவறையில் சிறுவனை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 11 வயது சிறுவன் பாலாஜி கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று கதவை திறந்தபோது கையில் பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து மாணவன் கத்தி கூச்சல் போடவே ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளிக்கு அருகில் புதர் அதிகம் கிடைப்பதாலும், பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததாலும் இப்படி பட்ட சம்பவங்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.