Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளி விபத்து…. ஈடுசெய்ய முடியாத இழப்பு…. அன்பில் மகேஷ் உருக்கம்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருநெல்வேலியில் கட்டிடம் இடிந்து விழுந்த பள்ளியில் கழிவறை சுற்றுசுவர் அடித்தளம் இல்லாமல் கட்டியிருந்ததால் இடிந்து விழுந்துள்ளது. மேலும் பள்ளி கட்டிடங்களின் தன்மையை குறித்து ஆராய ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்து உடனடியாக அவற்றை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |