Categories
மாநில செய்திகள்

JUSTIN : பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோரை… இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்… ஒபிஎஸ்…!!!

பாலியல் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபடுவோரை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நேற்று கரூரில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதன் மூலமாக அவர் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கோவையை சேர்ந்த மாணவி பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு மாணவியும் உயிரிழந்துள்ளது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இம்மாணவி இறந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “கரூரில் பாலியல் தொல்லையால் உயிரிழந்த மாணவிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |