முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு தொடர்ந்து பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது உடல் டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
தற்போது டெல்லி பாலம் விமான தளத்தில் அவர்களின் உடல்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த மூப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு காங்கிரஸ் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக எம்பிக்கள் கலாநிதி, வீராசாமி, ஞானதிரவியம், எம்பி கனிமொழி உள்ளிட்ட பல தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.