Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : புத்தாண்டு தினத்தில் ரஜினி தரிசனம்…. ரசிகர்களுக்கு வாழ்த்து….!!!!

2022 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்நாளில் அனைத்து மக்களும் உற்சாகமாக தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் திரைப்பிரபலங்களும் தங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். தற்போது அவர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வந்து, அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். வேட்டி, சட்டையுடன் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ரஜினியை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |