தமிழகத்தில் புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புலிகள் காப்பகம் ரூபாய் 6 கோடி செலவில் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புலி வேட்டை தடுப்பு, காட்டு வளங்களை பாதுகாத்தல், காட்டு தீ ஏற்படாமல் தடுத்தல் போன்றவை இந்தத் திட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது. Project Tiger என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்திற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.