சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் திருவள்ளூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.