உத்தரபிரதேச மாநிலத்தில் ரூபாய் 22,500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். விரைவு சாலை திறப்பு நிகழ்ச்சிக்கு ஹெர்குலஸ் ராணுவ விமானத்தில் பிரதமர் மோடி வந்து இறங்கினார். இந்த சாலை லக்னோவில் இருந்து கிழக்கு மாவட்டங்களை இணைக்கிறது. 341 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விரைவு நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.