சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் செயல் பொறியாளர் வலுக்கும் மாநகர வருவாய் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து விதிகளின்படி அபராதம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று மாலை 5 மணிக்குள் அகற்ற வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.