Categories
மாநில செய்திகள்

JUSTIN : பொங்கல் பரிசு தொகுப்பு…. வெளியான சுற்றறிக்கை….!!!

பொங்கல் பரிசு தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற ரேஷன் பொருள்களும்,  இலவச சேலை, வேட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என அனைத்து மண்டல பதிவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க பட வேண்டும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |