மக்களே என்னுடைய தெய்வங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட காசி விசுவநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்கு உள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றி பார்த்தார். அதுமட்டுமில்லாமல் அங்குள்ள ஊழியர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து, அவர்களுடன் உணவும் அருந்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “என்னை பொருத்தவரை மக்களே என்னுடைய தெய்வங்கள்” என்றார். மேலும் காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்கிறார் பாரதி என பாரதியாரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்.