இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 55 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இணை அமைச்சர் எல் முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி 579 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 43 மீனவர்களையும் 6 விசைப் படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது 12 மீனவர்களையும் கைது செய்தனர் .அதேபோல் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக இணையமைச்சர் எல். முருகன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.