Categories
மாநில செய்திகள்

JUSTIN: மழை நிவாரணம்… இன்று கூடும் தமிழக அமைச்சரவை..!!! 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மழையால் ஏற்பட்ட சேதம், நிவாரண நிதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. கனமழை எச்சரிக்கை அமைச்சர்கள் அனைவரும் நிவாரண பணியில் ஈடுபட்டு இருந்ததால் நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம் இன்று ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

 

Categories

Tech |